சோசியல் நெட்வொர்க் (social network )தளங்களில் அனைவரும் பயன்படுத்தும் மிகப்பிரம்மாண்டமான தளமாக இருக்கும் பேஸ்புக் (Facebook) , டிவிட்டர் (Twitter), கூகிள் பிளஸ் (google plus) போன்ற அனைத்து தளங்களிலும் நாம் உரையாடிய உரையாடல்கள் மற்றும் படங்கள் என அனைத்து தகவல்களையும் நம் கணினியில் சேமித்து வைத்துக் கொள்ள (backup) உதவ ஒரு மென்பொருள் உள்ளது இதைப்பற்றித் இங்கே பார்ப்போம்.
சோசியல் நெட்வொர்க் தளங்களில் உள்ள உங்கள் தகவல்களை சேமிக்கிறோம் என்று பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள் கூடவே தேவையில்லாத எரிச்சலைத்தான் நம் கணினிக்கு கொண்டுவருகிறது , உதாரணமாக சில மென்பொருட்களை நிறுவியதும் தேடுதல் பக்கம் மற்றும் சில தகவல்கள் நம்மிடம் கேட்காமலே மாறிவிடுகின்றது அப்படி இப்படி என்று எந்தப்பிரச்சினையும் இல்லாமல் சோசியல் நெட்வொர்கில் இருக்கும் நம் தகவல்களை சேமிக்க இந்த மென்பொருள் உதவுகிறது.
Download : http://socialsafe.net/
இத்தளத்திற்கு சென்று மென்பொருளை இலவசமாக (Download) தறவிரக்கி நம் கணினியில் நிறுவிக்கொள்ளவும், அடுத்து மென்பொருளை இயக்கி நாம் நம்முடைய எந்த சோசியல் நெட்வொர்க் தளத்தில் இருந்து தகவல்களை எடுக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து நம் User id மற்றும் Password ஐ கொடுத்து திறந்து கொள்ளவும்.
அதன் பின் எந்த மாதம் எந்த தேதியில் உள்ள தகவல்கள் மற்றும் புகைப்படங்களை தரவிரக்கம் செய்ய வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொண்டு பார்த்தால் போதும்,Export all என்பதை Click செய்து அனைத்து தகவல்களையும் நம் கணினியில் சேமிக்கலாம், புதுமை விரும்பிகளுக்கும் பேஸ்புக் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் அனைவருக்குமே பயன் உள்ளதாக இருக்கும்.
மேலும் நமக்கு சில நேரங்களில் facebook ல் ஒருவருடத்திற்கு முன்பு நாம் வெளியிட்ட தகல்கள் தேவைப்படும். ஆனால் அதை எடுப்பது மிகவும் கடினம். மவுசை உருட்டிக் கொண்டே செல்ல வேண்டும். இந்த மென்பொருளின் மூலம் அந்த கவலையும் இனி இல்லை. நாம் எடுத்து வைத்துள்ள backup ல் இருந்து எளிதில் அந்த தகவலை பார்த்துக் கொள்ளலாம்.
இந்த மென்பொருளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய வீடியோ:

0 comments :
Post a Comment