இந்தியாவில் பிறந்த 17 ஆயிரம் பேர் தொடர்பில் உரிய பதிவுகள் இல்லை

ந்திய அகதி முகாம்களில் பிறந்த இலங்கை பிள்ளைகள் 17 ஆயிரம் பேர் தொடர்பில் உரிய பதிவுகள் இல்லை என்று தி ஹிந்து தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இவர்களுக்கு உதவ முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், ஈழம் அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் நிறுவனர் சந்திரஹாசன் வெளியிட்டுள்ள தகவலில்,

குறித்த பிள்ளைகளை பதிவு செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட நடமாடும் சேவையை தமிழக அரசாங்கம் நிறுத்தியமையை அடுத்து இந்த விடயம் கிடப்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் களை பெற்றுக்கொள்வதற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு பிறப்பு சான்றிதழ்கள் தேவை.எனினும், பெரும்பாலான பெற்றோருக்கு பிறப்பு சான்றிதழ்கள் இல்லை என்றும் சந்திரஹாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :