பிரித்தானிய அதிகாரி ஒருவருக்கு மனஅழுத்தம்

சுனாமி இடம்பெற்ற காலத்தில் இலங்கையில் கடமையாற்றிய பிரித்தானிய அதிகாரி ஒருவருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2004ஆம் ஆண்டு சுனாமி இடம்பெற்ற காலத்தில் குறித்த அதிகாரி இலங்கையில் கடமையாற்றியிருந்தார். டேவிட் கொலின்ஸ் என்ற 45 வயதான பொலிஸ் பயிற்சியாளரே இவ்வாறு மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.

டேவிட் கொலின்ஸ் சடலங்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் பணியினால் தமக்கு உளவில் ரீதியான அழுத்தம் ஏற்பட்டதாகத் தெரிவித்த கொலினஸ் 400, 000 ஸ்ரெலிங் பவுண்ட்கள் நட்ட ஈடாக பெற்றுக்கொண்டுள்ளார்.

சுனாமி அனர்த்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கை மக்களுக்கு உதவிக் கிட்டியமை மகிழ்ச்சியளிப்பதாக கொலின்ஸ் தெரிவித்துள்ளார்.

பெரும் எண்ணிக்கையிலான சடலங்களை அடையாளம் காண உதவியளித்தாகவும், இந்த பணிகளினால் தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :