பொதுத்­தேர்­தலில் வெற்­றிப்­பா­தைக்­கிட்டு செல்லும் நோக்­குடன் 15 எம்.பி.க்கள் அடங்­கிய குழு நிய­மித்­துள்ளது -ஐ.தே.க

பொதுத்­தேர்­தலில் கட்­சியை வெற்­றிப்­பா­தைக்­கிட்டு செல்லும் நோக்­குடன் 15 எம்.பி.க்கள் அடங்­கிய குழு­வொன்றை ஐக்­கிய தேசிய கட்சி நிய­மித்­துள்ளது இது தொடர்­பாக சிறி­கொத்­தாவில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போது அக்­கட்­சியின் ஊடக பேச்­சாளர் கயந்த கரு­ணா­தி­லக்க கருத்து தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

எதிர்­வரும் காலங்­களில் ஊவா மாகாண சபை தேர்தல் மற்றும் பொது தேர்தல் நடத்­தப்­ப­டக்­கூ­டிய சாத்­திய கூறுகள் தென்­ப­டு­கின்­றன.

இதற்­க­மைய கிராம மட்­டத்தில் கட்­சி­யினை வெற்றி பாதைக்கு இட்­டுச்­செல்­வ­தற்­கான நட­வ­டிக்கை மேற்கொள்­ளப்­பட்டு வரு­கி­றது.

இதற்­க­மைய தேர்தல் வாக்­க­ளிப்பு நிலை­யங்­க­ளுக்கு கட்சி சார்­பாக பலர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­துடன் பிர­தேச ஒருங்­கி­ணைப்பு கிளை­களை புன­ர­மைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை கண்­கா­ணித்து கட்­சியை வெற்­றிப்­பா­தைக்­கிட்டு செல்லும் நோக்­குடன் 15 எம்.­பி.க்கள் அடங்­கிய குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த குழு­வினால் விரைவில் அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இதன்­படி கட்சியின் எதிர்­கால வேலைத்­திட்­டங்கள் வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்­கப்­படும். இதே­வேளை ஊவா மாகாண சபை தேர்தல் அறி­விக்­கப்­பட்ட பின்பு பல­மான வேட்­பா­ளர்­களை எமது கட்சி களமிறக்கவுள்ளதுடன்

ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு கிடைத்தவுடன் எமது ஜனாதிபதி வேட்பாளரின் பெயரையும் வெளியிடுவோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :