அல் கிம்மா சமூக சேவைகள் அமைப்பு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கல்



த.நவோஜ்-

ல் கிம்மா சமூக சேவைகள் அமைப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கும் திட்டம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு செவ்வாய்கிழமை உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹ்வி) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அல் கிம்மா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், சவூதி அரேபியாவைச் சேர்;ந்த தனவந்தருமான அஷ்ஷெய்க் முதீப் தவாப் அஸ்ஸபீஈ கலந்து கொண்டு உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 700 குடும்பங்களுக்கு ஐந்து மில்லியன் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹ்வி) தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :