உள்ளுராட்சி வாரம் 2014 முன்னிட்டு கோறளைப்பற்று வடக்கு சஞ்சிகை வெளியீடு



த.நவோஜ்-

ள்ளுராட்சி வாரம் 2014 முன்னிட்டு கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையினால் முதன் முறையாக பிரதேசத்தினுடைய கல்வி, கலை, கலாசாரம், பிரதேசத்தின் தொன்மை, கலை இலக்கிய முயற்சிகளை ஆவணப்படுத்தும் வகையிலான நெய்தல் சஞ்சிகை வெளியீடு திங்கட்கிழமை இடம்பெற்றது.

பிரதேச சபையின் செயலாளர்; சிவலிங்கம் இந்திரகுமார் தலைமையில் பிரதேச சபையின் சபையின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஜனாப்.எம்.வை.சலீம், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் காசிப்பிள்ளை சித்திரவேல், கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் செல்வி.இராசநாயகம் இராகுலநாயகி, வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.வி.கே.பி.ஜயரத்தின, வாகரை பிரதே சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


அதிதிகளை பாண்ட் வாத்தியத்துடன் வரவேற்கப்பட்டு, அதிதிகளால்; கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இதன்போது வாகரை பிரதேச செயலாளர் செல்வி.இராசநாயகம் இராகுலநாயகி பிரதேசத்தினுடைய அபிவிருத்தி, மீள் கட்டுமானம் மற்றும் அர்ப்பணிப்பான சேவைக்காக பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அத்தோடு எழுத்தாளரும், ஓய்வு பெற்ற கிராம சேவகருமான கு.சிங்காரவேல் இலக்கிய துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக கௌரவிக்கப்பட்டார்.

இங்கு முதல் பிரதியினை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஜனாப்.எம்.வை.சலீமினால் வழங்கி வைக்கப்பட்டது.

நெய்தல் சஞ்சிகையின் ஆசிரியராக வாகரை பிரதே சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளுராட்சி வாரம் 2014 முன்னிட்டு கடந்த ஏழு நாட்களாக கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபையினால் நடமாடும் சேவை, வருமான மேம்பாட்டு நடவடிக்கைகள், சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் (டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வீதி நாடகம்), மக்கள் பயன்பாட்டை முன்னிட்டு வாகரைப் பிரதேசத்தில் சந்தை நடவடிக்கைகளை பலப்படுத்தல், மரம் நடுகை, கல்வி மற்றும் நூலக அபிவிருத்தி, விளையாட்டு மற்றும் பேச்சு, கட்டுரை, சித்திரம் போட்டிகளை நடாத்துதல் பிரதேச சபையினுடைய செயற்பாடுகளை, செயற்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை ஆவணப்படுத்தல், பிரதேசத்தினுடைய கல்வி, கலை, கலாசாரம் பிரதேசத்தின் தொன்மை, கலை இலக்கிய முயற்சிகளை ஆவணப்படுத்தும் வகையிலான 'நெய்தல்' சஞ்சிகை வெளியீடும் நிகழ்வுகள் என்பன இடம்பெற்றிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :