எனக்கு பேச விருப்பமில்லை. இருந்தாலும் இந்த சந்தர்ப்பத்தில் சில கருத்துக்களை நான் கூறியாகவேண்டும். இன்று (25) பத்திரிகைகளில் நான் கூறியதாக என்மீது அபாண்டமாக பழிகளைச் சுமத்தி பொய்யான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி என்னை சாகடித்துவிட்டார்கள்.
உண்மையில் எனக்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் விரைவில் அறிவீர்கள். இன்று நாடு உள்ள சூழலைப் பார்க்கும் போது மிகவும் கவலைப்படுகின்றேன்.
இந்த நாட்டில் சிங்கள, தமிழ் முஸ்லிம் என்ற பேதங்கள் இருக்கக் கூடாது. அனைவதும் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக எனது போராட்டம் தொடரும் என்பதை இச்சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்கின்றேன்.
எனது இந்த சூழ்நிலையில் இதைவிட கூடுதலாக பேச முடியாது. காலப்போக்கில் எல்லாவற்றையும் எல்லோரும் தெரிந்து கொள்வார்கள்.
இறுதியாக, அளுத்கம கடைகளுக்கும், வீடுகளுக்கும் தீ வைத்துவிட்டு மனிதர்களையும் கொலைசெய்து அழித்த ஞானசார தேரர் இன்று வெளியில், இனவாதத்தைக் கண்டித்து அனைவரும் சமாதானம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என பேசும் நான் இன்னும் சில வினாடிகளில் உள்ளே…..
(வடரக்க விஜித தேரர் நேற்று இறுதியாக வழங்கிய செய்தி - தமிலாக்கம்)
ஏஎம்பி

0 comments :
Post a Comment