அளுத்கம வன்முறைகளுக்குப் பொறுப்பான குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமெரிக்கா

ளுத்கம வன்முறைகளுக்குப் பொறுப்பான குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று, தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி உதவி இராஜாங்கச் செயலர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். 

சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த அதுல் கெசாப், அளுத்கம வன்முறைகள் குறித்து கருத்து வெளியிடுகையில், 

உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில், தூண்டிவிடும் பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் தடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் ஆபத்தானவை. 

மத சுதந்திரம் குறித்து அமெரிக்கா ஆழமான அக்கறை கொண்டுள்ளது. 

நான் எல்லாச் சந்திப்புகளிலும், மத விவகாரங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :