திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன-ஹலீம்

இ. அம்மார்-

ன்று இலங்கை வாழ் முஸ்லிம் தம் சமூகத்திற்கு எதிராக முற்றுப் புள்ளியற்ற நிலையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை மிகவும் நிதானத்துடனும் பொறுமையுடனும் தாங்கி கொண்டிருக்கின்றனர். 

 இந்த இக்கெட்டான சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் தங்களுடைய வர்த்தக நிலையங்களை காப்புறுதி செய்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளும்படி கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம். எச். ஏ.ஹலீம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்
பெஷன் பக், அளுத்கம, குருநாகலில் நடைபெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் மீது தாக்குதல் போன்ற பின்னணிகளைப் பார்க்கின்ற போது திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

 மானவல்லையில் ஹாட்வயார் எரிப்பு மின் கசிவின் மூலம் ஏற்பட்டதா அல்லது திட்டமிட்ட அடிப்படையில் அக்கடையில் பின்னால் உள்ள ஒரு இரும்புக் கதவையும் ஒரு பலகைக் கதவையும் இரும்புக் கம்பியால் உடைத்துக் கொண்டு உள்நுழைந்து தீ மூட்டப்பட்டதா என்ற சந்தேகங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. 

இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் மிகப் பொறுமை காத்துக் கொண்டு இருக்கின்றனர். எனினும் இவ்வாறான கோடிக் கணக்கான இழப்புக்களை நஷ;டயீட்டின் மூலம் பெற்றுக் கொள்வதற்காக பாதுகாப்பு காப்புறுதிகளைச் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத் தேவை இருந்து கொண்டிருக்கிறது. இதில் இஸ்லாமிய சட்டவரம்புகளைப் பார்த்துக் கொண்டிருக்காமல் தங்களுடைய வர்த்தக நிலையங்களை காப்புறுதி செய்து கொள்ளுதல் மிக மிக அவசியமாகும்.

எனவே இந்த நாட்டில் முப்பது வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஐந்தாண்டு நிறைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் மூவின மக்களிடையே பிளவை உண்டு பண்ணும் மேலும் ஒரு பயங்கரவாதம் சில தீய சக்திகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டுவரும் சமூகத்தை பாதுகாக்க வேண்டி பாரிய கடப்பாடு இந்த ஆட்சியாளருக்கு உண்டு.

 எனவே இந்த பதற்றமான சூழலில் முஸ்லிம்கள் இறைவனிடம் கூடுதலாக பிரார்த்தனைகளில் ஈடுபடுவதுடன் தங்களுடைய வர்த்தக நிலையங்களை பாதுகாப்புக் கருதி காப்புறுதி செய்துகொள்ளுதல் வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :