த.நவோஜ்-
பட்டிப்பளை கெவிலியாமடுவில்; காட்டுயானைகளின் அட்டகாசத்தின் பாதிக்கப்பட்ட இடத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
மட்டக்களப்பின் எல்லைக் கிராம பிரதேசங்களில் காட்டுயானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்ற காட்டுயானைகளின் சீற்றத்திற்கும் அதன் தாக்குதல்களுக்கும் இலக்காகி மக்கள் மிகவும் துன்பகரமான சூழலில் தமது வாழ்வினை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை கெவிலியாமடு தாந்தாமலை ரெட்பாணா போன்ற பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எல்லைக் கிராமங்களில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்துள்ளது. இதன் போது பலமக்களின் குடியிருப்புகள், வாழிடங்கள் என்பன சேதமடைந்துள்ளன.
காட்டுயானைகளின் தாக்குதலுக்கு இலக்கான இப்பிரதேசங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், மா.நடராஜா, பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், அம்மக்களுடன் கலந்துரையாடல்களும் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)


0 comments :
Post a Comment