உயர்தரம் கற்கும், கற்கவிருக்கும் மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு

எம்.ஐ.சம்சுதீன், எம்.வை.அமீர்-
ம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைக்கு தோற்றி கல்விப்பொதுத்தராதர உயர் தரத்துக்கு செல்ல காத்திருக்கும் மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு 2014-04-19 ம் திகதி கல்முனை சாஹிரா கல்லுரி பழைய மாணவர்கள் சங்க கொழும்பு கிளையின் அனுசரணையுடன் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியின் சேர் ராசிக்பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியல் பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக பீட சிரேஷ்ட விரிவுராயாளர் ஹம்சியா அப்துல் ரவுப், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி என்.ஆரீப் அவர்களும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைப்பீட விரிவுரையாளர் ஏ.றமீஸ் மற்றும் தொழில்பயிற்சி அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளர் ஏ.ஏ. ஜாபீர் போன்றோரும் பங்கு கொண்டிருந்தனர்.

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம். பதுர்தீன் மற்றும் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியின் அதிபர் எம்.நவாஸ் போன்றோரும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டிருந்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :