பலகையொன்று கல்முனை மாநகர சபையினால் அகற்றப்பட்டுள்ளாதாக
முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என கல்முனை பொலிஸ் நிலைய
பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்த முறைப்பாடு கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ்
மீராசாஹிப்பினால் தொலைநகல் மூலம் செய்யப்பட்டுள்ளது என அவர்
குறிப்பிட்டார். இந்த முறைப்பாடு குறித்த விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்முனை மாநகர மேயராக சிராஸ் மீராசாஹிப் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யும்
புகைப்படத்தினை கொண்ட விளம்பர பலகையொன்று கல்முனை மாநகர
சபை மற்றும் கல்முனை பொலிஸ் நிலையம் ஆகியவற்றுக்கு முன்னாள்
காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் இந்த விளம்பரப் பலகை கல்முனை மேயர் நிசாம் காரியப்பரின் உத்தரவிற்கமைய கல்முனை மாநகர சபை ஊழியர்களினால் நேற்று அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடனான விளம்பரப் பலகை அகற்றப்பட்டுள்ளது என முன்னாள் மேயர் சிராஸ் தொலைநகல் மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகளை கல்முனை பொலிஸ் நிலைய குற்றப்பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத் அலியிடம் கல்முனை பொலிஸார் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.

0 comments :
Post a Comment