காத்தான்குடியைச் சேர்ந்தவரின் ஜனாஸா கத்தார் முஸைமீர் மையவாடியில் நல்லடக்கம்






கத்தாரிலிருந்து பழுளுல்லாஹ் பஹ்ஜான் -


காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மட் ஜவ்பர்முஹம்மட் இஸ்மாயில் (வயது46) என்பவரின் ஜனாஸா இன்று ஞாயிற்றுக்கிழமை கத்தார் முஸைமீர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்று இஷாத் தொழுகையின் பின் அபூ ஹாமூர் முஸைமீர் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு அதே மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த ஜனாஸாவில் இலங்கை வாழ் சகோதரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அன்னாரது கப்று வாழ்க்கை வெளிச்சத்திற்காகவும் மறுமை வாழ்வுக்காகவும் வல்ல இறைவன் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக! ஆமீன்

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் கடந்த இரு நாட்களுக்கு முன் கத்தாரில் வபாத்தானமை குறிப்பிடத்தக்கது.

{{ஒரு ஆத்மா எங்கு மரணிக்கும் என்பது யாரினாலும் அறிய முடியாதூ}} அல்குர்ஆன் 31:34
" وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ"
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :