11 ஆவது உலக சமாதானப் பயனத்தின் 2014 இன் இளைஞர்களுக்கான மனித உரிமைகள் மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் தெற்காசியாவின் இளைஞர் மற்றும் மனித உரிமைகள் உச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு மஹிந்த ராஜபக்ஷ தாமரைத்தடாக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றன.2, 3ஆம் நாள் நிகழ்வுகள் விளையாட்டுத்துறை அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் நேற்றும் நேற்றுமுன்தினமும் நடைபெற்றன.
இரண்டாம் நாள் நிகழ்வில் சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், நிலையான அபிவிருத்தி, விளையாட்டு மற்றும் இசை ஆகிய விடயங்களில் மனித உரிமை மீறல் தொடர்பாக மாநாடு இடம்பெற்றது.
பிரபல திரைப்பட நட்சத்திரமான நடிகை பூஜாவும் இந்நிகழ்வுகளில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேஷியா, மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் இருநூறுக்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்களும் இதில்கலந்து கொண்டனர்.








0 comments :
Post a Comment