நான் உண்மையான முஸ்லிம் என்றவகையில் மனவேதனை அடைந்துள்ளேன் - பைஸர் முஸ்தபா



மு
ஸ்லிம் சமூகத்திற்கும் அவர்களின் புனித அல்குர் ஆனுக்கும் தொடர்ந்தும் அபகீர்த்தி ஏற்படும் வகையில் பொதுபல சேனா அமைப்பினர் நடந்துகொள்ளும் விதத்தை அரசில் அங்கம் வகிக்கும் பிரதியமைச்சர் என்ற வகையில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். 

இத்தகைய அவர்களது செயலானது முஸ்லிம் மக்களுக்கிடையிலும் சிங்கள - பெளத்த சமூகங்களுக்கிடையிலும் மனக்கசப்பையும் விரிசலையும் ஏற்படுத்த வழிவகுக்கும். 

எனவே பொதுபலசேனா அமைப்பினர் இத்தகைய செயல்களை உடனடியாக கைவிட வேண்டும் என ஸ்ரீல. சு. க. மத்திய கொழும்பு அமைப்பாளரும், முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சருமான பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கிடையிலும் நிலவும் உறவுகளை சீர்குலைக்க முனைந்து வருகிறார். இவர் கடந்த 2014.04.12 ஆம் திகதி தொலைக்காட்சி ஒன்றில் வெளியிட்ட கருத்துக்கள், என் கவனத்தை ஈர்க்க வைத்துள்ளதுடன் ஒரு உண்மையான முஸ்லிம் என்ற வகையில் இது தொடர்பில் நான் மன வேதனை அடைந்துள்ளதுடன் விரக்தியான நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளேன். 

புனித அல் - குர்ஆனில் தக்கியா எனும் பெயரில் மற்றவர்களின் காணிகளை அபகரியுங்கள். அடுத்தவர்களின் சொத்துக்களை பறித்தெடுங்கள் என ஒரு வசனம் இருப்பதாக பொதுபலசேனா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது இவ்வாறானதொரு வசனம் இருப்பதாக தெரிவிப்பது உண்மைக்குப் புறம்பான அப்பட்டமான பொய் என்பதை உலக வாழ் முஸ்லிம்கள் அனைவரும் அறிவார்கள்.

இவ்வாறானதொரு வசனம் குர்ஆனில் இடம்பெறவில்லை என்பதை நானும் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

புனித அல் - குர்ஆன் என்பது அல்லாஹ்வால் இறக்கப்பட்ட திருவசனங்களாகும். இவ் வசனங்கள் ஊடாக ஏனையோரை நிந்திப்பதோ அல்லது மானபங்கப்படுத்துவதோ அல் - குர்ஆன் அருளப்பட்டதன் நோக்கமல்ல. அனைவருக்கும் வழிகாட்டும் ஒரு அற்புத வேதமாகவே அல் - குர்ஆன் அமைந்துள்ளது. புனித குர்ஆன் நம்பத்தகுந்ததும் உண்மையானதுமாகும். இதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. இந்நிலையிலேயே பொதுபல சேனாவின் செயலாளர் குர்ஆனை அவமதித்துப் பேசி வருகிறார்.

ஞானசார தேரர் புனித குர்ஆனை அவமதித்துப் பெசியிருப்பது இது முதற்தடவையல்ல. இதற்கு முன்பும் பல தடவைகள் இவவ் ¡றான தகாத வார்த்தைகளினால் அல் - குர்ஆனை விமர்சித்துப் பேசியிருக்கிறார். இதனை அவர் வேண்டுமென்றே செய்து வருகின்றமை தெட்டத்தெளிவாகப் புரிகின்றது.

நான் ஐக்கிய இலங்கை ஒன்றுக்காக மிகந்த விசுவாசம் வைத்துள்ளதோடு அதனைப் பாதுகாத்து கட்டியெழுப்புவதிலும் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றேன். இலங்கையின் ஒருமைக்காக இடைவிடாது துணிந்து பாடுபடவும் நான் என்னை அர்ப்பணித்துள்ளேன். பாராளுமன்ற உறுப்பினராக நான் கண்டி மாவட்டத்தில் தெரிவாகி வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டாலும், சிங்கள - பெளத்த மக்கள் அதிகமாக வாழும் தொகுதியிலேயே என்னைத் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பி வைத்துள்ளனர். இந்த நன்றியை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.இதற்கு நன்றிக்கடனாக பெளத்தர்களின் சில முக்கிய தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்துள்ளதோடு பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் அவர்களுக்காக மேற்கொண்டுள்ளேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :