டிலான் பெரேரா ஒரு அமைச்சரா..? பிச்சைக்காரன் என விமர்சித்த ஞானசார தேரர்



டகங்களிடம் பேசிய ஞானசார தேரர் தான் நாட்டின் சட்டங்களுக்கு மதிப்பளித்து செயற்படுவதாக குறிப்பிட்டார்.

அமைச்சர் டிலான் பெரேராவை பிச்சைக்காரன் என விமர்சித்த ஞானசார தேரர்

சிங்களவர்களுக்கு எதிரான ஒரு சட்டமும், முஸ்லிம்களுக்கு தனியான விசேடமான சட்டமும் செயற்படுத்தப்படுமாயின், அதனை தாம் எதிர்ப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில்நேற்று ஆஜரான பின்னர் ஊடகங்களில் கருத்து வெளியிடும் போதே இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மொஹமட் வட்டரெக்க விஜித என்ற காவி உடை அணிந்தவர். அவர் முஸ்லிம் பள்ளிவாசலில் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் என்பதே சரியானது. நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடிய மேடையை நாங்கள் ஏற்படுத்தியுள்ளேம் என்றார்.

அதேவேளை அமைச்சர் டிலான் பெரேரா, வட்டரெக்க விஜித மற்றும் ஞானசார தேரர்கள் மன நோயாளிகள் எனவும் அவர்கள் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் எனவும் கூறியிருந்தமைக்கு பதிலளித்த ஞானசார தேரர்,

நாட்டின் ஐக்கியத்தை சிதைத்து நாட்டை கூறு போடும் தரப்பிலும் விடுதலைப் புலிகளை செல்லம் கொஞ்சிய தரப்பிலும் இருந்த டிலான் பெரேரா போன்றவர்கள் அமைச்சுக்களில் இருந்து கொண்டு தற்போது கூக்குரல் இடுகின்றனர்.

இவர்கள் யார்?. அமைச்சர்களாக இவர்கள்?. பிச்சைக்காரர்கள். நானும் வட்டரெக்க விஜித தேரரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாம்.

நாங்கள் கால்நடை மருத்துவருடன் நாளைய தினம் அமைச்சர் டிலான் பெரேராவின் தலையை சோதித்து பார்க்க வருவோம்.

கால்நடை மருத்துவருடன் சென்றால், இவர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஆணுமில்லாத பெண்ணும் இல்லாத இவர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்று முழு இனத்தையும் கோழைகளாக மாற்றியுள்ளனர் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :