தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் என கருதி வலியோடு வந்து நடித்து கொடுத்தார். சமந்தா

டப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு நடிகை சமந்தா காயம் அடைந்தார். ரபாஷா தெலுங்கு படப்பிடிப்பில் இந்த சம்பவம் நடந்தது. 

இதில் ஜூனியர் என்.டி.ஆர். ஜோடியாக நடிக்கிறார். இப்படத்துக்கான சண்டை காட்சியொன்றை ஐதராபாத்தில் படமாக்கினர். பெரிய அரங்கு அமைத்து இக்காட்சியை எடுத்துக் கொண்டு இருந்தனர். 

சமந்தா அருகில் நின்று கொண்டிருக்க ஜூனியர் என்.டி.ஆர். வில்லன் நடிகர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார். 

அப்போது பெரிய மரப்பலகையொன்று சமந்தா கால் மேல் விழுந்தது. இதனால் காலில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. ரத்தமும் கொட்டியது. சமந்தா வலியில் துடித்தார். உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காயத்தில் மருந்து வைத்து கட்டு போடப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு சிறிது நேரம் ரத்து செய்யப்பட்டது. 

படப்பிடிப்பு நின்றால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படும் என கருதி சமந்தா வலியோடு வந்து மீண்டும் நடித்து கொடுத்தார். 

சமந்தா தமிழில் சூர்யா ஜோடியாக அஞ்சான், விஜய் ஜோடியாக கத்தி படங்களில் நடித்து வருகிறார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :