இலங்கையர்கள் லிபியா செல்லத் தற்காலிக தடை

லிபியாவிற்கு இலங்கைப் பணியாளர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

தற்காலிக அடிப்படையில் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 

லிபியாவில் தற்போது நிலவி வரும் நிலைமைகளின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. 

வெளிவிவகார அமைச்சின் தகவல்களையும் பெற்றுக் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

இதன்படி, தனிப்பட்ட ரீதியிலோ அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களின் ஊடாகவோ லிபியாவிற்கு இலங்கையிலிருந்து வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் நடவடிக்கைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :