எதிரிகள் எங்களை இழிவுபடுத்தும் போது, நாங்கள் பலம் பெறுகிறோம். அரசியல் ஆதாயத்திற்காக என்னையும், எனது கணவரையும் விமர்சனம் செய்கின்றனர் என்றும், அவர்கள் விமர்சனம் என்னை கடுமையாக காயப்படுத்தியது என்றும் காங்கிரக்ஷ் தலைவர் சோனியா மகள் பிரிங்கா பிரசாரத்தின் போது தனது மனக் குமுறலை வெளிப்படுத்தினார்.
அவர் மேலும் பேசியதாவது;
எதிர்கட்சியினர் எங்களின் குடும்பத்தினர் மீது கடந்த 2 ஆண்டுகளாக கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்களின் அரசியல் லாபத்திற்காக இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.
பலரும் என் அரசியல் விமர்சனத்தின்போது எனது கணவரை முன்வைத்து தாக்குகின்றனர்.
எதிராளிகள் என்ன மாதிரியான தாக்குதல் நடத்த வேண்டும் என விரும்புகின்றனரோ அந்த அளவிற்கு தாக்கி பேசிக்கொள்ளட்டும். அந்த அளவிற்கு நாங்கள் பலம் பெறுவோம்.
எனது தாயார் சோனியா இந்த பகுதி மக்களுக்கு அதிகம் செய்துள்ளார். எங்களுக்கு நீங்கள் வெற்றியை தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பிரியங்கா பேசினார்.

0 comments :
Post a Comment