த.நவோஜ்-
வாகரைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெள்ளையடிமடு வாவியில் வியாழக்கிழமை மீன்
பிடித்துக் கொண்டிருந்த போது தோணி கவிழ்ந்ததில் ஒருவர் நீரில் மூழ்கி
உயிரிழந்துள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளையடிமடு கிராமத்தை சேர்ந்த மீனவரான இராஜேந்திரா ரஜிகாந்த (வயது 18)
என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கட்டு வலையில் மீன்கள் பிடிபட்டுள்ளதாகவென்று தோணியிலிருந்தவாறே இவர் வலையை
எடுத்துப் பார்க்க முற்பட்ட போது இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட
விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வாகரை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

0 comments :
Post a Comment