முகமூடி ஹெல்மட் விவகாரத்தின் தடை குறித்து மீண்டும் ஆராய்வு



மு
கத்தை முழுமையாக மறைக்கும் ஹெல்மட்டுக்களை அணிந்து கொண்டு மேற்கொள்ளப்படும் கொள்ளைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இவ்வாறான ஹெல்மட்டுக்களை தடை செய்யும் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவது குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொண்டு வருவதாகவும் முகத்தை முழுமையாக மறைக்கும் ஹெல்மட்டுக்களை பாவிக்கும் நபர்கள் குறித்து இரகசியமான முறையில் தகவல்களை திரட்டி வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

முகத்தை முழுமையாக மறைக்கும் ஹெல்மட்டுக்களை அணிந்து கொண்டு கடந்த டிசம்பர் 26ம் திகதி முதல் இன்றுவரை 14 கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் இரண்டு கொள்ளைகள் குறித்து மட்டுமே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :