பேஸ்புக் மூலம் சிறுமி துஷ்பிரயோகம் - பேராசிரியர் கைது




ணையத்தைப் பயன்படுத்தி 15 வயதிற்கும் குறைவான சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு பல்கலைக்கழக விரிவுரையாளரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ருகுணு பல்கலைக்கழக வளாகத்துடன் இயங்கும் கராப்பிட்டிய வைத்தியப்பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்படி விரிவுரையாளர் இணையத்தின் ஊடாக ஆபாசப்படங்களை காண்பித்து தகாதவாறு உரையாடியுள்ளார். குறித்த சிறுமியை நேரடியாக பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவரை கண்டுபிடிக்கும் நோக்குடன் 15 வயது சிறுமியை போன்று உரையாடிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 'சைபர் வோட்ச்" என்னும் இணைய துஷ்பிரயோக தவிர்ப்பு சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட கண்காணிப்பின் அடிப்படையில் குறித்த பேராசிரியரை கைது செய்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :