காத்தான்குடி ஜமாத்தே இஸ்லாமி கிளையின் இமாறா செயற்திட்டத்தின் டெங்கு ஒழிப்பு பாரிய சிரமதானம் மூலம் துப்பரவு-படங்கள்

பழுலுல்லாஹ் பர்ஹான்-

லங்கை ஜமாத்தே இஸ்லாமியின் காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் ஜமாத்தே இஸ்லாமியின் இமாறா செயற்திட்டத்தின் டெங்கு ஒழிப்பு பாரிய சிரமதான நிகழ்வு 20-04-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி அஷ் -ஷூஹதா வித்தியாலய தோனா கல்வாய் பகுதியில் இடம்பெற்றது.

இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் காத்தான்குடி கிளை பொறுப்பாளர் ஆசிரியர் எம்.எம்.எச்.எம். இப்றாஹீம் தலைமையில்; இடம்பெற்ற இவ் பாரிய சிரமாதன நிகழ்வில் கிளையின் செயலாளர் ஆசிரியர் ஜஹானி உட்பட இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் காத்தான்குடி கிளை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி அஷ் -ஷூஹதா வித்தியாலய தோனா கல்வாய் பகுதி இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் காத்தான்குடி கிளை உறுப்பினர்களின் மனித நேயம் பேணும் டெங்கு ஒழிப்பு பாரிய சிரமதானத்தின் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

குறித்த ஜமாத்தே இஸ்லாமியின் காத்தான்குடி கிளை காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு மனிதாபிமான சமூக சேவை பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :