புத்தசாசனத்தை அழிக்க தயாராகியுள்ள, அதற்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் நபர்களுக்கு நடவடிக்கை எடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என புத்தசாசன அமைச்சரான பிரதமர் டி. எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
புத்தசாசனத்திற்குள்ளேயே அதனை அழிக்கும் நபர்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நிலைமையானது பௌத்த மக்களுக்கும், பௌத்த பிக்குகளுக்கும் பிரச்சினையாக மாறியுள்ளது.
அப்படியான நபர்களை புத்தசாசனத்தில் இருந்து நீக்கும் வகையில் குறித்த சட்டத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சட்டத்திற்கு 31 தலைமை பௌத்த பிக்குகளில் உதவியும் கிடைத்துள்ளது என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment