சாலியவெவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவத்தில் கடமையை செய்யத் தவறிய குற்றச்சாட்டில் இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒருவர் சாலியவெவ - வீரபுர பகுதியில் இருப்பதாக 21ம் திகதி தகவல் கிடைத்தது.
அதன்பின் குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டு அன்றைய தினம் மாலையே தப்பிச் சென்றுள்ளார்.
இராணுவ வீரர் தப்பிச் சென்ற சமயத்தில் கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் சார்ஜன் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

0 comments :
Post a Comment