பதுளையில் முஸ்லிம் கல்வியை சீரழிக்க துடிக்கும் சுதந்திரக் கட்சி முஸ்லிம் கிளை ..!

up country muslim conference-
மைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவை அண்மையில் சந்தித்த பதுளை ஸ்ரீ ல சு க முஸ்லிம் கிளை, பல சவால்களுக்கு மத்தியில் கட்டியெழுப்ப பட்டுக் கொண்டிருக்கும் பதுளை முஸ்லிம் கல்வி அபிவிருத்தியை சீரழிக்கும் வகையிலான பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. பதுளை மாநகர சபை உறுப்பினர் மன்சூர் அவர்களின் தலைமையில், பதுளை ஸ்ரீ ல சு க முஸ்லிம் கிளை தலைவர் எம் எஸ் எம் பாரூக் உட்பட பலர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் பல கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டுள்ளன. அவற்றில் பதுளை முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபரை இடமாற்றக் கோரியும், ப / அல் அதான் ம வி யை ஆயிரம் பாடசாலை திட்டத்திற்கு உள்வாங்கப் பட்டுள்ளதால் அதன் ஆரம்ப பிரிவை வேறுபடுத்தி அல் ஹிக்மா ஆரம்ப பாடசாலை என தனியாக இயங்கி வரும் பாடசாலையின் அதிபரை இடமாற்ற கோரியும் மேலும் அப்பாடசாலையை முன்னர் இருந்தவாறு ஒன்றாக சேர்க்கும் படியும் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபரை இடமாற்றுவதற்கு வேண்டுதல் விடுப்பதற்கான முக்கிய காரணமாக அதிபரின் கணவர் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாகவும், பத்திரிகைகளில் எழுதுவதும், அசாத் சாலி அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும், மகியங்கன வடரெக விஜித தேரோவை அழைத்து நோம்புதிறக்கும் நிகழ்வில் பொது பல சேனாவுக்கெதிராக பேச வைத்ததையும் பாடசாலை நிர்மாணப்பணிகளில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், இப்பாடசாலையின் அதிபரின் கணவர் அல்கைதா தொடர்புடையவர் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்கள் .

இது பற்றி முஸ்லிம் மகளிர் வித்தியாலய அதிபரின் கணவருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்ட பதுளை வளைய கல்விப் பணிப்பாளர், திரு கொடகந்த அவர்கள் "மிக நல்லமுறையில் சிறப்பான பெறுபேறுகளுடன் முன்னேற்ற பாதையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மகளிர் வித்தியாலயத்தில் திடீரென என்ன நடைபெறுகின்றது என்று வினா தொடுத்தார். மேலும் அதிபரை இடமாற்றக் கோரி பதுளை முக்கியஸ்தர்கள் சிலரால் அமைச்சருக்கு வேண்டுதல் விடுக்கப் பட்டிருப்பதாகவும் இது விடயமாக மாகாண சபை உறுப்பினர் மானெல் ரத்னாயகவிடம் பேசி நல்லதொரு முடிவை எடுக்கும் படியும் கேட்டுக் கொண்டதுடன் தாம் பதவிக்கு வந்து கடந்த சுமார் இரண்டரை வருட காலத்தில் அவதானித்த வகையில் இந்த பாடசாலை பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குவதாகவும் உங்கள் சமூகத்துக்குள் நடைபெறும் குழுச் சண்டைகளால் எதிர்கால சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு வராமலும் பார்துகொள்ளுமாரும் வேண்டினார்.

அதை தொடர்ந்து ஊவா மாகாண சபை உறுப்பினர் மானெல் ரத்னாயகவை தொடர்பு கொண்டு இது பற்றி கேட்ட போது "பதுளை மாநகர உறுப்பினர் மன்சூர் தலைமையில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை சந்தித்த பதுளை ஸ்ரீ ல சு க முஸ்லிம் கிளை தலைவர் எம் எஸ் எம் பாரூக் உட்பட பலர் கலந்து கொண்ட நிகழ்வில் பல கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டுள்ளதாகவும் அதில் பதுளை முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபரை இடமாற்றக் கோரியும் வேண்டுதல் விடுக்கப் பட்டுள்ளதாகவும் இதற்கான காரணம் அதிபரின் கணவர் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதாகவும் அசாத் சாலிக்கு ஆதரவு தெரிவித்து பத்திரிகைகளில் எழுதுவதாகவும் குற்றஞ் சாட்டப் பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த "பதுளை ஸ்ரீ ல சு க முஸ்லிம் கிளை" கடந்த காலங்களில் ஊவா மாகாண சபையில் முஸ்லிம் கல்வி பிரிவொன்றை ஏற்பதும் முயற்சிகள் கடந்தநெடுங்காலமாக பலர் முயற்சி செய்து வந்த வேலையில் மேற்படி முஸ்லிம் பிரிவுக்கான அனுமதி கிடைத்து அதற்கான உத்தியோகத்தர்கள் நியமிக்கப் பட்ட நிலையில், தற்போதைக்கு மாகாண முதலமைச்சர் ஊவா முஸ்லிம்களின் கல்வி தேவைகளை பெற்றுத்தருவதால் இப்படியானதொரு முஸ்லிம் கல்வி பிரிவு தேவையில்லை என்றும் பதுளை ஸ்ரீ ல சு க முஸ்லிம் கிளை தலைவர் எம் எஸ் எம் பாரூக் அவர்கள் கையொப்பமிட்டு மாகாண முதலமைச்சருக்கு (ஸ்ரீ, ல, சு, க முஸ்லிம் கிளை கடிததலைப்பில்) எழுத்து மூலம் அறிவித்து அதன் ஒரு பிரதியை பொது பல சேனாவிட்கு அனுப்பியதுடன் குறிப்பிட்ட கடிதத்தை டி என் எல் நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய பொது பல சேனா செயலாளர் ஞானசார தேரர் பகிரங்கமாக மக்களுக்கு காட்டி "இது போன்ற நல்ல முஸ்லிம்களும் இருக்கும் எமது நாட்டில் எல்லா சந்தர்பங்களிலும் பிரிவினையை கோரும் அடிப்படைவாதிகளும் உள்ளார்கள்" என்று கருத்துக் கூறியதும், பதுளையில் நடைபெற்ற பொது பல சேனா பகிரங்க பொதுக் கூட்டத்தில் இவ்விடயத்தை காரசாரமாக விமர்சித்ததையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்ட வேண்டும். இந்த நடவடிக்கைகளின் பின்பு குறித்த ஊவா மாகாண முஸ்லிம் பிரிவு மீண்டும் கனவாக ஆக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :