பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருந்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்த ஹெல உறுமய கட்சியின் ஊடக செயலாளர் நிஷாந்த வாணசிங்க மேலும் கூறுகையில்;
தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்து பெற்றவரான ரவூப் ஹக்கீம் இந்நாட்டுக்கும் இவ்வரசாங்கத்திற்கும் எதிராக செயற்பட்டுள்ளது மிகவும் பிரச்சினைக்குரிய விடயமாகும். ரவூப் ஹக்கீம் மகிந்த சிந்தனையை ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பது குறித்து எமக்கு பெரும் சந்தேகமுள்ளது.
எந்தவொரு தேர்தலின் போதும் அரசாங்கத்திலிருந்து விலகி தேர்தல்களில் போட்டியிடும் தன்மை கொண்ட முஸ்லிம் கட்சியின் செயற்பாடுகள் இலங்கைக்கு எதிராக மாற்றமடைந்துள்ளது. சிறுபான்மையினமான முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் இலங்கைக்கெதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ரவூப் ஹக்கீமால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இலங்கைக்கெதிரான சர்வதேச அழுத்தத்தை சற்று அதிகரித்துள்ளது.
எந்தவொரு தேர்தலிலும் அரசாங்கத்தின் பக்கம் நிற்காத முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு இவ்வரசாங்கத்திற்குத் தேவையற்றதொன்றாகும்.
அதனால் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் செயற்பாட்டிற்கு தகுந்த நடவடிக்கையொன்றை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும். அத்துடன் முஸ்லிம் மக்களின் மத்தியில் பிரிவினை வாதத்தை தூண்டி விட்டு பாகிஸ்தானில் மலாலாவுக்கு ஏற்பட்ட நிலையை போன்று இலங்கையில் ஏற்படுத்துவதற்கு ரவூப் ஹக்கீம் முயற்சி செய்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

0 comments :
Post a Comment