பங்களாதேஷூக்கு எதிரான கடுமையான போட்டியில் இலங்கை வெற்றி

லங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் வெற்றியொன்றைப் பதிவு செய்ய கடுமையாகப் போராடிய பங்களாதேஷ் இறுதிப் பந்தில் அந்த வாய்ப்பைத் தவறவிட்டுள்ளது.

பங்களாதேஷூக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை 2 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

சிட்டகொங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 7 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்ஷான் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார்.

அணித்தலைவர் டினேஷ் சந்திமால், குமார் சங்கக்கார, சீகுகே பிரசன்ன ஆகியோர் பங்களாதேஷ் வீரர்களின் அபார பிடியெடுப்பில் ஆட்டமிழந்தார்கள்.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா தனது நான்காவது சர்வதேச இருபதுக்கு20 அரைச்சதத்தைக் கடந்தார்.

இறுதி நேரத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய நுவன் குலசேகர 21 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களைப் பெற்றது.

வெற்றி இலக்கான 169 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய பங்களாதேஷ் சார்பாக முதல் விக்கெட்டில் 52 ஓட்டங்கள் பகிரப்பட்டன.

தமிம் இக்பால் 30 ஓட்டங்களையும், சம்சுர் ரஹ்மான் 22 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

ஷகிப் அல் ஹசன் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய அனாமுல் ஹக் 58 ஓட்டங்களைப் பெற்று இலங்கைக்கு சவால் விடுத்தார்.

இதன் போது கடைசி ஓவரில் பங்களாதேஷ் வெற்றிபெற 21 ஓட்டங்கள் தேவையாக இருந்ததுடன் 3 பௌண்டரிகளை விளாசிய அனாமுல் ஹக் இறுதிப் பந்தில் ஆட்டமிழக்க வெற்றி இலங்கை வசமானது.

இதன்படி 2 போட்டிகள் கொண்ட இந்த சர்வதேச இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் 1-0 எனும் கணக்கில் இலங்கை முன்னிலை வகிக்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :