அடிப்படை வசதி இன்றி வாழும் மக்களை நேரில் சென்று பார்வையிட்டார் யோகேஸ்வரன் - படங்கள்



ந.குகதர்சன்-
ட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்திற்கு விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் அடிப்படை வசதி இன்றி வாழும் மக்களை நேரில் சென்று நேற்று பார்வையிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்கரை பிரதேசமாக காணப்படும் காத்தான்குடி பிரதேசத்திற்கு அருகில் உள்ள ஆரையம்பதி பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் அடிப்படை வீடு, கிணறு, மலசல கூட வசதி இன்றி பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் அதிகப் படியான பிள்ளைகளுடன் திகழும் குடும்பங்களாக காணப்படுவதையும் அறிய முடிந்துள்ளது. இவர்களது அடிப்படை தேவையை நிறைவேற்ற மனிதநேய அன்பர்கள் முன்வர வேண்டும் எனவும் பாரளுமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :