கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சுதந்திர தின வைபவம்



அஸ்லம் எஸ்.மௌலானா-


ல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இலங்கையின் 66 ஆவது சுதந்திர தின வைபவம் இன்று காலை மாநகர சபை வளாகத்தில் நடைபெற்றது.

மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, ஏ.எம்.றியாஸ் மற்றும் மாநகர முதல்வர் நிசாம் காரியப்பரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாரூக் ஆகியோர் உட்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் அவர்களின் விசேட வாழ்த்துச் செய்தியும் வாசிக்கப்பட்டது.

முதல்வர் நிசாம் காரியப்பர் அவரகள் வெளிநாடு சென்றிருப்பதால் அவர் இவ்வைபவத்தில் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :