நாட்டின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகள்



எஸ்.அஷ்ரப்கான்-

நாட்டின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேசத்தில் பல்வேறு நிகழ்வுகள் சமயஸ்தலங்கள், பாடசாலைகள், பிரதேச செயலகம் மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் போன்ற பல இடங்களில் விசேட வைபவங்கள் சமயக்கிரியைகள், தேசியக்கொடியேற்றும் நிகழ்வுகள் இன்று (04) செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா தலைமையில் பள்ளிவாசல் வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், பள்ளிவாசல் மரைக்காயர்கள், இளைஞர்கள் பிரதேசவாசிகளும் கலந்து கொண்டு; சிரமதானத்தில் ஈடுபட்டனர்.

அதுபோல் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தலைமையில் தேசியக்கொடியேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் உதுமாலெப்பை உட்பட உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் சாய்ந்தமருதுபிரதேசத்தின் பரபல வர்த்தக நிறுவனமான முபாறக்டெக்ஸ்டைல்ஸ் ஏற்பாட்டில் அதன் முகாமைத்துவப்பணிப்பாளர் சமூக சேவையாளரும், தொழிலதிபருமான சாமஸ்ரீ எம்.எஸ்.எம்.முபாறக் தேசியக் கொடி ஏற்றிவைத்தார். அத்துடன் நாட்டின் சுபீட்சத்துக்காக சாய்ந்தமருது ஜம்ஆப் பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி எம்.ஐ.ஆதம்பாவாவினால் துஆப் பிரார்த்தனையும் இங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :