தமிழ் தேசிய கூட்டமைப்பே; எமக்கு கிடைத்த வீட்டை ஏன் இல்லாமல் ஆக்குகிறாய் - பாரிய ஆர்ப்பாட்டம்



வுனியா மாவட்டத்தில் நடை முறைப்படுத்தப்பட்டுவரும் இந்திய வீடமைப்பு திட்டத்தினை நிறுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்டித்தும்,இத்திட்டத்தை நிறுத்த வேண்டாமெனக் கோறியும் இன்று திங்கட்கிழமை வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.

வவுனியா மாவட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒன்று சேர்ந்து இந்த ஆர்ப்பாட்டத்தினை செய்தனர்.

வவுனியா காமினி சிங்கள மஹா வி்த்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணி மன்னார்-வவுனியா வீதி ஊடாக வவுனியா கச்சேரியினை வந்தடைந்தது.

பேரணியல் கலந்து கொண்டவர்கள், சிதைக்காதே சிதைக்காதே இன உறவை, இந்திய வீடமைப்பு திட்டத்தை தந்த இந்தியாவுக்கு நன்றிகள், அழிக்காதே அழிக்காதே ஒற்றுமையினை அழிக்காதே, தமிழ் தேசிய கூட்டமைப்பே, ஏன் எமக்கு கிடைத்த வீட்டை இல்லாமல் ஆக்குகின்றாய், இந்திய அரசே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொய் பிரசாரத்தை செவி சாய்க்காதே, இலங்கை ஜனாதிபதியே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சதியில் இருந்து எம்மை பாதுகாருங்கள், ஒன்றுபடுவோம் ஒன்றுபடுவோம் எமது சமூகங்களின் பாதுகாப்புக்கு, இந்திய வீடமைப்புத திட்டத்தை பெற்றுத் தந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு நன்றிகள் போன்ற வாசகங்களை கொண்ட பதாகைகள் காணப்பட்டதுடன், கோஷங்களையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழங்கினர்.

கச்சேரிக்கு முன்பாக நீண்ட நேரம் தரித்து நின்ற ஆரப்பாட்டக்காரர்கள்,கச்சேரிக்குள் செல்வதற்காக சுற்றுவட்டத்தை அடைந்த போதும்,பொலீஸார் அதனை தடுத்து நிறுத்தினர்.

இந்திய உயர் ஸ்தானிகர் ஊடக இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குரஷித், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்பி வைக்கும் வைகையில் மகஜரொன்றும் இதன் போது கையளிக்கப்பட்டது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :