மாஸ்கோவில் பள்ளிக்கூடத்தில் நுழைந்து மர்ம மனிதன் துப்பாக்கி சூடு - மாணவர்கள் சிறைபிடிப்பு

மா
ஸ்கோ நகரின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்குள் இன்று துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம மனிதன் காவலாளிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி உள்ளே நுழைந்தான். அவன் பள்ளிக்குள் நுழைந்தவுடன் காவலாளிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக பள்ளிக்கு விரைந்து வந்த போலீசாருக்கும், துப்பாக்கி மனிதனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு போலீஸ்காரர் மற்றும் ஒரு ஆசிரியர் பலியானதாகவும் மேலும் ஒரு போலீஸ்காரர் படுகாயமடைந்ததாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். பின்னர் அப்பள்ளியில் உள்ள உயிரியல் வகுப்பிற்குள் நுழைந்த அந்த ஆசாமி, அங்கிருந்த 29 மாணவர்களையும் சிறைபிடித்தான்.

ஆனால் சிறிது நேரத்திற்குள்ளேயே சிறைபிடித்த மாணவர்கள் அனைவரையும் அவன் விடுவித்ததாக கூறப்பட்டுள்ளது. பள்ளிக்குள் துப்பாக்கி மனிதன் நுழைந்த தகவல் கிடைத்தவுடன் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வெளியே குவிந்துவிட்டனர். பள்ளியின் தொலைபேசி இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் துப்பாக்கி மனிதன் இதுவரை எந்த வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :