இந்தியா– நியூசிலாந்து லெவன் அணிகள் மோதும் 2 நாள் பயிற்சி ஆட்டம் வாங்கரேயில் நடந்தது.
நியூசிலாந்து லெவன் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 262 எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. ஒடோனல் 80 ரன் எடுத்தார். ஈஷ்வர் பாண்டே 3 விக்கெட் கைப்பற்றினார்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 41 ரன் எடுத்து இருந்தது. முரளிவிஜய் 19 ரன்னிலும், தவான் 16 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று (திங்கட்கிழமை) 2–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. முரளி விஜய் மேலும் ரன் எதுவும் எடுக்காமலும், தவான் 26 ரன்னிலும், புஜாரா 33 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 93 ரன்னில் இந்தியா 3 விக்கெட்டை இழந்தது.
4–வது விக்கெட்டான கேப்டன் ரோகித் சர்மா– ரகானே ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரை சதம் எடுத்தனர்.
ரகானே 60 ரன்னும், ரோகித்சர்மா 59 ரன்னும் எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்துக்கொண்டனர். விர்த்திமான் சகா 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். அஸ்வின் 46 ரன் எடுத்தார்.
ஆட்டத்தின் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 313 ரன் எடுத்தது. இதனால் ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது. அம்பதி ராயுடு 49 ரன் (அவுட்இல்லை).
இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 6–ந்தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது.

0 comments :
Post a Comment