தொப்பிகல பிரதேசத்தை அண்மித்த கிராமங்களைச் சேர்ந்த 37 குடும்பங்களை மீள்குடியேற்றும் நடவடிக்கை

 ந.குகதர்ஷன்-

ட்டக்களப்பு மாவட்டத்தில் தொப்பிகல பிரதேசத்தை அண்மித்த கிராமங்களைச் சேர்ந்த 37 குடும்பங்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கை திங்கட்கிழமை நடைபெற்றது.

கடந்த சுமார் 24 வருடங்களுக்கு முன்னர் போர்ச் சூழலின் போது இடம்பெயர்ந்த இவர்களை மீள்குடியமர்த்தும் பணி வெடிபொருட்கள் அகற்றும் நடவடிக்கையினால் தாமதமடைந்திருந்தது.

இக்குடும்பங்களுக்கு தற்காலிக கொட்டில்களை அமைப்பதற்கான சீமேந்துப் பைகள் மற்றும் கூரைத் தகடுகள் வழங்கும் நிகழ்வு கிரான் ரெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.


பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் அமைச்சின் செயாலாளர் ஜனக சுகதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருங்காலிச்சோலை மற்றும் கள்ளிச்சை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இக்குடும்பங்கள் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்து கிரான் பிரதேசத்திலுள்ள உறவினர் நண்பர்கள் வீடுகளில் இதுவரைகாலமும் தற்காலிகமாகத் தங்கியிருந்தனர்.

யுத்தம் முடிவடைந்த போதிலும் குறித்த பகுதிகளில் வெடிபொருட்களை அகற்றும் பணி நடைபெற்றதால் மீள்குடியேற்றும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :