கசினோவுக்கு எதிராக ஹெல உருமயவின் மகளிர் அணி களத்தில்

பிமானி மகளிர் அபிவிருத்தி மன்றம் 10 லட்சம் பெண்களிடம் கையெழுத்துக்களை பெற்று பாரிய மகஜர் ஒன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்க தீர்மானித்துள்ளது.

கசினோ சூதாட்ட நிலையங்கள் ஆரம்பிக்கப்படுவது உட்பட சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து ஆயிரக்கணக்கான பெண்களின் பங்களிப்போடு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படும் என அந்த அமைப்பின் தலைவியும், ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய செயற்குழு உறுப்பினருமான நிரோஷா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆர்ப்பாட்டம் விரைவில் நடத்தப்படும். அன்றைய தினமே பெண்களிடம் கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்.

முதலில் கொழும்பில் பெண்களிடம் கையெழுத்துக்களை பெற்ற பின்னர் ஏனைய நகரங்களிலும் பெற்று மகஜரை தயாரித்து பேரணியாக சென்று அதனை ஜனாதிபதியிடம் கையளிக்க எண்ணியுள்ளோம்.

நாட்டை அபிவிருத்தி செய்யக் கூடிய எத்தனையோ வளங்கள் நாட்டில் இருக்கும் பொழுது, சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கைகள் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய நினைப்பது பௌத்த விழுமியங்களுடன் கூடிய நாட்டுக்கு பொருத்தமற்றது.

அபிவிருத்திக்காக சமூகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை முன்னெடுத்ததால் அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள அனர்த்தமான தலையெழுத்து கண்களுக்கு எதிரில் உலகில் ஒப்புவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :