சமுர்த்தி உதவி பெறுவோர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் சம்பந்தமான விழிப்புணர்வு

-நிஸ்மி-
திவிநெகும - வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சமுர்த்தி உதவி பெறுவோர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் சம்பந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்று அக்கரைப்பற்று நகர்ப்பிரிவு-01ல் தாறுஸ் ஸுப்பான் கல்வி நிலையத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.முஸ்தாக் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் கலந்து கொண்டதோடு, மற்றும் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஏ.இமாமுதீன், வளதாரியான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எச்.ஏ.வஹாப், திட்ட முகாமையாளர் என்.ரி;மஸுர், வலய முகாமையாளர் எஸ்.சுரேஸ்கான், வலய சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர் யூ.எல்.ஆரிபீன், திட்ட உதவியாளர் எம்.எல்.எம்.இஸ்மாயில் ஆகியோருடன் சமுர்த்தி உதவி பெறும் குடும்ப்த தலைவர், தலைவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எச்.ஏ.வஹாப் தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஏ.இமாமுதீன் ஆகியோர் வளதாரிகளாகக் கலந்து கொண்டு கருத்தரங்கினை சிறப்பாக நடாத்தினார்கள்.

உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் உரையாற்றுகையில்: வறுமையை ஒழித்து உங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு வறுமையில் வாடும் பயனாளிகளாகிய உங்களது ஒத்துழைப்பின்றி செயற்படுத்த முடியாது; அரசின் உதவிகளை எதிர்பாராது பிரதேசத்தில் கிடைக்கும் முலவளங்களைப் பயன்படுத்தி வருமானம் தரக்கூடிய சுய தொழில்களை ஏற்படுத்தி நிரந்தர வருமானத்திற்கான வழிகளை ஏற்படுத்துவதன் முலம் வறுமையை ஒழித்து வாழ்வை மேம்படுத்தலாம் என்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :