கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய ஜாம்பவானான சச்சின் டெண்டுல்காரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள், கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெறுகிறது.
சச்சினின் தீவிர ரசிகராக உள்ள மும்பை பட உலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், மும்பை வான்கடே மைதானத்தில் கள ஊழியர்களுக்கும் நடந்த மோதலையடுத்து அந்த மைதானத்திற்குள் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், கொல்கத்தாவில் நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சச்சினின் விளையாட்டை பார்வையிட ஷாருக்கான் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கொல்கத்தாவில் நடைபெறும் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள அங்கு செல்கிறேன். வரும் 10-ம் தேதி அன்று சச்சின் டெண்டுல்கர் கலந்துகொள்ளும் கடைசி போட்டிக்கு முந்தைய டெஸ்ட் போட்டியை பார்வையிட முயற்சிப்பேன். நிச்சயம் சச்சின் விளையாட்டை அங்கு கண்டு ரசிப்பேன். வாய்ப்பிருக்கும் பட்சத்தில் அவரை நேரில் வாழ்த்துவேன்.
சில இடங்களுக்கு நான்கூட செல்ல அனுமதியில்லை. என்னை விரும்பாத மக்கள் இருக்கும் இங்கு, என் மீது உள்ள அன்பிற்காக மூன்று மணி நேரம் வரை நீங்கள் காத்திருக்கிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
சச்சினின் ஓய்வு பற்றிய அறிவிப்பை கேள்விபட்ட ஷாருக்கான், இந்த முடிவு தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார். கிரிக்கெட்டில் நிறைய சாதனைகளை செய்த சச்சின் விளையாட்டை நன்கு உணர்ந்தவர். அவர் ஓய்வு எடுத்து குடும்பத்துடன் திருப்தியாக வாழவேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்தார்.

0 comments :
Post a Comment