எல்லாமே முதல் தடவை தானாம்...

லக நாயகன் கமல்ஹாஸனுடன் முதல் முறையாகக் கைகோர்க்கிறார் நகைச்சுவை நடிகர் சந்தானம்.

விஸ்வரூபம்-2 படத்தை முடித்த கையோடு கமல்ஹாசன் நடிக்கும் படம் உத்தமவில்லன்.

ரமேஷ் அர்விந்த் இயக்கும் இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் பல சுவாரசியங்கள் நிறைந்துள்ளன.

கமல் ஹாஸனுடன் முதல் முறையாக ஜோடி சேருகிறார் காஜல் அகர்வால். அதேபோல, அவர் படத்துக்கு முதல் முறையாக இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

அதேபோல முதல் முறையாக நகைச்சுவை கலந்த வில்லன் வேடத்தில் நடிக்கிறார் கமல்ஹாஸன்.

தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் இந்தப் படத்தில் முதல் முறையாக கமல்ஹாஸனுடன் கைகோர்க்கிறார் சந்தானம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :