லாரி, பேருந்து, ஆட்டோ அடுத்தடுத்து மோதல் - தலை துண்டாகி வாலிபர் பலி

துரை நான்குவழிச்சாலையில் அசுர வேகத்தில் வந்த லாரி, அரசு பேருந்து, ஆட்டோ அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் பரிதாபமாக மாணவர் ஒருவர் தலைதுண்டாகி உயிரிழந்தார்.

மதுரை- சிவகங்கை ரோடு நான்கு வழிச்சாலையில் நேற்று காலை 7.30 மணியளவில் சக்கிமங்கலத்திற்கு சென்ற அரசு பேருந்து மீது திருச்சியிலிருந்து தூத்துக்குடி நோக்கி அசுர வேகத்தில் சென்ற சரக்கு லாரி பயங்கரமாக மோதியது.

அதே வேகத்துடன் சாலை ஓரம் நின்றிருந்த ஆட்டோ மீதும் மோதியது.

லாரி மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தும், ஆட்டோவும் ஒன்றுடன் ஒன்று மோதியது.

லாரியும், பேருந்தும் ஆட்டோவை 30 அடி தூரத்திற்கும் மேல் இழுத்துச் சென்று பொலிஸ் பூத்திற்குள் புகுந்தது.

இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. அடுத்தடுத்த நடந்த இந்த மோதலில் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் ஆட்டோவிலிருந்து வெளியே குதித்து உயிர் தப்பினார்.

ஆட்டோவின் இடது பக்கம் பேருந்துக்காக காத்திருந்த வாலிபர் விபத்தில் சிக்கினார்.

ஆட்டோ, பேருந்துடன் வாலிபரையும் மின்னல் வேகத்தில் பொலிஸ் பூத்திற்குள் லாரி தூக்கி வீசியது.

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய வாலிபரின் தலை மட்டும் துண்டாகி பொலிஸ் பூத்திற்குள் விழுந்தது. உடல் அரசு பேருந்தின் சக்கரத்திற்கு மேல் பகுதியில் சிக்கி கொண்டது.

தகவலறிந்த பொலிசார் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான வாலிபர் சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்த தங்கவேல் மகன் சரவணன்(18) என்றும், மதுரையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் என்பதும் தெரியவந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :