மாலைதீவு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்

மாலைத்தீவில் மமூன் அப்துல் கயூம் கடந்த 30 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து வந்தார். 

அதன்பிறகு கடந்த 2008–ம் ஆண்டு பல கட்சிகள் பங்கேற்ற முதலாவது ஜனநாயக தேர்தல் நடைபெற்றது. அதில்,
மாலைத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் முகமது நஷீத் வெற்றி பெற்றார்.

ஆனால் 4 ஆண்டுகள் மட்டுமே பதவியில் நீடித்த அவர், இராணுவ புரட்சி காரணமாக கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் பதவி விலகினார்.
துணை ஜனாதிபதியாக இருந்த முகமது வகீத், ஜனாதிபதியானார்.

இந்நிலையில், 2–வது ஜனநாயக தேர்தல் கடந்த இரண்டு மாதங்களுக்குமுன் நடைபெற்றது ஆனால் அதில் தேர்தல் முறைகேடு நடைபெற்றதாக கூறி மாலைதீவின் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

எனினும் மீண்டும் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத், முன்னாள் ஜனாதிபதி கயூமின் சகோதரரும், மாலைத்தீவு முற்போக்கு கட்சி வேட்பாளருமான அப்துல்லா யாமீன்,
ஜமூரி கட்சி வேட்பாளர் காசிம் இப்ராகிம் ஆகியோர் போட்டியிட்டனர்.

475 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் முன்னால் ஜனாதிபதி முஹமத் நஷீத் 96589 (46.87%) வாக்குகளைப் பெற்று முதலாவதாகவும், மாலைதீவு முற்போக்கு கட்சி வேட்பாளர் அப்துல்லாஹ் யாமீன் 61454 (29.82%) வாக்குகளைப் பெற்று இரண்டாவதாகவும்,
ஜமூரி கட்சி வேட்பாளர் காசிம் இப்ராஹிம் 48023 (23.3%) வாக்குகளைப் பெற்று மூன்றவதாகவும், தெரிவு செய்யப்பட்டனர். 

எனினும் எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மை அதாவது 50% க்கு மேற்பட்ட வாக்குகளை பெறாததால் மாலைதீவு தேர்தல் விதிப்படி இரண்டாம் கட்ட தேர்தல் நடத்துவதற்கு
தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்ட தேர்தல் எதிர் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது இதில் முன்னால் ஜனாதிபதி முஹமத் நஷீத் மற்றும் மாலைதீவு முற்போக்கு கட்சி வேட்பாளர் அப்துல்லாஹ் யாமீன் போட்டியிடவுள்ளனர்.

தகவல்
மாலைதீவில் இருந்து முஹமத் ஜதீர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :