மாத்தறையில் பள்ளிவாசலை மூடவில்லை என்றால் மோதல் ஏற்படும் - பௌத்த பிக்குகள் எச்சரிக்கை

மாத்தறை - இஸ்ஸத்தின் நகரில் கடந்த பல வருடங்களாக இயங்கிவந்த (வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டு)பள்ளிவாசலை உடனடியாக மூடும்படி பௌத்தசாசன அமைச்சின் புனித பூமி பிரிவின் பணிப்பாளர் திசாநாயக்கா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த உத்தரவுக் கடிதம் வக்பு சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் முஸ்லிம்கள் குறைவாகவே வசிப்பதாகவும், ஒன்றரை கிலோ மீற்றர் பகுதிக்குள் 3 பள்ளிவாசல்கள் காணப்படுவதாகவும், இவ்வாறு பள்ளிவாசல்கள் காணப்படுவது அவசியமற்றதெனவும் குறித்த பிரதேச பள்ளிவாசல் சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படுத்துவதாகவும், இந்நிலை தொடருமாயின் அங்கு மோதல் நிலை உருவாகுமெனவும் பிரதேச பௌத்த குருமார் பௌத்தசாசன அமைச்சுக்கு எச்சரித்துள்ளனர்.

இதையடுத்தே பௌத்த சாசன அமைச்சினால் மாத்தறை - இஸ்ஸதீன் நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலை உடனடியாக அகற்றுமாறு வக்பு சபைக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இவ்விவகாரம் குறித்து பிரதேச முஸ்லிம்கள் பொலிஸ்மா அதிபருக்கு இன்று 07-11-2013 அறிவித்துள்ளதுடன், முஸ்லிம் கவுன்சிலிடமும் முறையிட்டுள்ளனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :