முஸ்லிம் மீடியா போரத்தின் பதில் செயலாளராக ஜாவிட் முனவ்வர் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பதில் செயலாளராக ஜாவிட் முனவ்வர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளரான இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் றிப்தி அலி ஏழு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பலஸ்தீனத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயணமாகியுள்ளார்.

பலஸ்தீனத்தில் நடைபெறும் இரண்டாவது பலஸ்தீன் இளைஞர் வார நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகவே றிப்தி அலி சென்றுள்ளார். இதன்போது பலஸ்தீன் முன்னாள் ஜனாதிபதி யாசீர் அரபாத்தின் எட்டாவது நினைவு தினம் மற்றும் பலத்தீன் சுதந்திரம் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின் காரணமாக எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பதில் செயலாளராக ஜாவிட் முனவ்வர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :