மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லாறு பாலத்தில் நேற்று (07.11.2013) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
மட்டக்களப்பு கல்முனை வீதியில் அமைந்துள்ள கோட்டைக்கல்லறு பாலத்தில் தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டத்தில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த தனியார் பஸ்சும் மட்டக்களப்பிலிருந்து காரைதீவு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்துக் கொண்டிருந்த இருவரும் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து இடம் பெற்றுள்ளதாக களுவாஞ்சிடி பொலிஸார் தெரிவித்தனர்
மேட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் இதில் பலத்த காயங்களுக்குள்ளாகி பெரியகல்லாறறு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உடன் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப் பட்டதாக பெரியகல்லறு மாவட்ட வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் றுதேசன் தெரிவித்தார்.
இதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டதாகவும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 8.10 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.முருகானந்தம் தெரிவித்தார்.
மரணடைச்தவர் காரைதீவு வெட்டு வாய்க்கால் விதியினைச் சேர்ந்த 56 வயதுடைய தேவராச என அடையாளம் காணப் பட்டுள்ளார் எனவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.முருகானந்தம் மேலும் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

0 comments :
Post a Comment