உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டால் தலையற்ற முண்டமே வீட்டுக்கு வரும்-மிரட்டல்

யாழ்ப்பாணம் வலி . வடக்கு பிரதேச சபை தவிசாளர் இனந்தெரியாதவர்களினால் மிரட்டப்பட்டுள்ளதாக
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாளைய தினம் வலி . வடக்கு மக்களால் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் வலி. வடக்கு தவிசாளர் சுகிர்தன் இவ்வாறு இனந்தெரியாதோரால் மிரட்டப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தவிசாளர் தெரிவிக்கையில்,

நேற்று இரவு தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்ட நபர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்த கூடாது என்றும் அவ்வாறு நடத்தப்பட்டால் தலையற்ற முண்டமே வீட்டுக்கு வரும் என்றும் மிரட்டினர் .

மேலும் அதே விடயத்தை குறுந்தகவல் மூலமும் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து காலை சுன்னாகத்தில் உள்ள அவரது வீட்டிற்கு முன்னால் எரிந்த மாட்டின் தலையினை கொண்டுவந்து வைத்து விட்டும் சென்றுள்ளனர் .

இது குறித்த தான் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :