வெளிநாட்டவர் இலங்கை முஸ்லிம் திருமண சட்டத்தின்படி திருமணம் செய்ய முடியாது

வெளிநாட்டை சேர்ந்த ஒரு முஸ்லிம் இலங்கை முஸ்லிமை இங்கு திருமணம் செய்யும் போது முஸ்லிம் திருமண சட்டத்தின்படி திருமணம் செய்ய முடியாது என அரசாங்கம் கூறுவது முஸ்லிம்களின் உரிமை மீதான பாரிய உரிமை மீறல் என்பதால் இதனை வாபஸ் வாங்க முஸ்லிம் கட்சிகள் முன்வர அரசை கோர வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது பற்றி அக்கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,

முஸ்லிம் தனியார் திருமண சட்டம் என்பது முஸ்லிம்களின் திருமணத்தை பதிவதற்கான சட்ட ஏற்பாடாகும். இதன் சட்டப்படி இரு தரப்பு முஸ்லிம்கள் சம்மதம் தெரிவித்தால் திருமணத்தை முஸ்லிம் விவாக சட்டத்தின்படி பதிவு செய்யமுடியும். அத்துடன் முஸ்லிம்களின் திருமணம் என்பது வெறுமனே பதிவு செய்தலுடன் முடிவடைவதில்லை. மாறாக சமயம் தழுவிய திருமண சடங்குகள், வலிதாரி என பல விடயங்கள் உள்ளன.

இதனை புரிந்து கொண்டே முஸ்லிம்களின் முன்னோர்களும், இந்த நாட்டின் அன்றைய சிறந்த சிங்கள அரசியல் தலைவர்களும் முஸ்லிம்களுக்கென தனியான திருமண சட்டத்தை ஏற்படுத்தினார்கள். இதுவே நூற்றாண்டு காலமாக நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில் இன்றைய அரசாங்கம் வெளி நாட்டு முஸ்லிம் ஒருவர் உள்நாட்டு முஸ்லிமை திருமணம் செய்வதாயின் சிங்கள திருமண சட்டத்தின்படி பதிய வேண்டும் என கூறுவது இலங்கை முஸ்லிம்களை மட்டுமல்ல முழு முஸ்லிம்களை அவமானப்படுத்தும் செயலாகும். அரசாங்கத்தின் இத்தகைய அறிவித்தல் மூலம் முஸ்லிம்களின் நூற்றாண்டுகால உரிமையில் கைவைத்துள்ளது.

இத்தகைய அநியாயத்தை அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் பகிரங்கமாக கண்டிக்க முன்வரவேண்டும். அத்தோடு இது விடயத்தில் இதுகாலவரை நடைமுறையில் இருந்த வெளிநாட்டு முஸ்லிம் உள்நாட்டு முஸ்லிமை இலங்கை முஸ்லிம் திருமண சட்டப்படி பதிவு செய்ய முடியும் என்பதை அரசாங்கம் மீண்டும் அறிவிப்பதற்கான முயற்சிகளில் முஸ்லிம் கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :