சத்திர சிகிச்சையின் போது 35 சிறிய சிறுநீரகக் கற்களை அகற்றி டாக்டர் சமீம் சாதனை - படங்கள்



-எம்.ரீ.எம்.பர்ஹான்-
ம்மாந்துறை அன்வர் இஸ்மாயில்; வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபள்யூ.எம்.சமீம் மற்றும் ஒரு சத்திர சசிகிச்சை செய்து சாதனை படைதுள்ளார்.

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில்; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு செய்யப்பட்ட சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது சிறுநீரகத்தில் இருந்து 35 சிறிய சிறுநீரகக் கற்களை அகற்றி டாக்டர் சமீம் சாதனைபடைத்துள்ளார்.

அதே தினத்தில் இன்னுமொருவருக்கு செய்யப்பட்ட மற்றுமொரு சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது பெரிய அளவிலானா மற்றுமொரு சிறுநீரகக் கல்லையும் டாக்டர் சமீம் அகற்றியுள்ளார்.

சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சிறு நீரகக் கல்லில் ஒன்று மான்கொம்பு வடிவில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த நோயாளியின் குருதி (0-)வகையானதாக இருந்ததாகவும், இந்த வகையான குருதியை அம்பாரை மாவட்ட வைத்தியசாலைகளில் பெறுவது மிகவும் கடினமா இருந்தால் அம்பாரை வைத்திய சாலையில் இருந்து பெறப்பட்ட ஒரு பைந் குருதியை நம்பியே இந்த சத்திர சிகிச்சையை செய்யப்பட்டதாகவும் டாக்டர் சமீம் தெரிவித்தார்.

மேலும் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையின் மயக்க மருந்தேற்றல் நிபுணரின் பூரண ஒத்தழைப்புடன் இந்த சிறு நீரக சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய முடிந்ததாகவும், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில்; வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபள்யூ.எம்.சமீம் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :