பியர் பாட்டிலில் இந்து கடவுள்களின் உருவங்கள் - கிளம்பியது புதிய சர்ச்சை

வுஸ்திரேலியாவில் பியர் பாட்டிலில் இந்து கடவுள்களின் உருவங்கள் அச்சிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் அவுஸ்திரேலியாவின் மதுபான நிறுவனம் ஒன்று தங்களது பியர் பாட்டில்களின் மேல் இந்துக் கடவுள்களாகிய பிள்ளையார், லக்ஷ்மி போன்ற தெய்வங்களின் உருவங்களை அச்சடித்திருந்தது.

இதனைக் கேள்விப்பட்ட அவுஸ்திரேலியா வாழ் இந்து மதத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இத்தகைய தெய்வ உருவங்களை மது பாட்டில்களின் மேல் வெளியிடுவது மிகவும் பொருத்தமற்ற செயலாகும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

அங்குள்ள இந்து மத யுனிவர்சல் சங்கத்தின் தலைவரான ராஜன் இதைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்துமதக் கடவுள்கள், கருத்துகள் மற்றும் குறியீடுகள் போன்றவற்றை வணிகப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துதல் கூடாது.

ஏனெனில், இந்த செய்கை இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எந்தவிதமான நம்பிக்கைக் குறியீடுகளும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

பிள்ளையார் மற்றும் லக்ஷ்மி போன்ற கடவுள்கள் இந்து மதத்தில் மிகவும் போற்றப்படுகின்றனர்.

இந்தத் தெய்வங்களை கோவில் சந்நிதிகளிலோ அல்லது வீட்டிலுள்ள இறைகூடங்களிலோ வைத்து வழிபட வேண்டுமே தவிர வணிகப் பேராசைக்காக பியர் பாட்டில் விற்பனைகளில் பயன்படுத்தக்கூடாது என்று ராஜன் கூறினார்.

தெய்வங்களின் உருவங்கள் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள பியர் பாட்டில்களை அந்த மதுபான நிறுவனம் திரும்பப் பெறவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :