பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டை சில நாடுகள் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் அரசியல் கைப்பாவையாக பயன்படுத்த முயற்சிப்பதாக பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நாடுகளின் அந்த முயற்சிகளுக்கு இடமளிக்க போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் சார்பில் கலந்து கொள்ள உள்ள சார்ள்ஸ் வெளிநாட்டு ஊடகங்களிடம் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சில நாடுகள் பொதுநவாய நாடுகளின் மாநாட்டை அரசியல் கைப்பாவையாக பயன்படுத்த முயற்சித்தாலும் அந்த அமைப்பின் நோக்கம் அதனை விட விரிவானது எனவும் இளவரசர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்கும் இந்த விடயங்களை வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்கேற்கும் இளவரசர் சார்ள்ஸ், பண்டாரநாயக்கவினருக்கு சொந்தமானதும் தற்பொழுது நவீன ஹோட்டலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதுமான கொழும்பு ரொஸ்மிட் பிளேசில் 65 இலக்கத்தில் உள்ள டின்டெங்கல் ஹோட்டலில் தங்கவுள்ளார்.
0 comments :
Post a Comment