மகளை பார்க்கச் சென்ற தந்தை பஸ்சில் பயணித்த நிலையில் மரணம்

பொகவந்தலாவையில் இருந்து அட்டன் நோக்கி இன்று காலை சென்ற பஸ்சில் பயணித்தவர் ஒருவர் பஸ்சிலேய மரணித்துள்ளார்.

பொகவந்தாலவை இராணிகாடு தோட்டத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 55 வயதுடைய வீரன் அங்கமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் கல்வி கல்வி பயிலும் தனது மகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான பொருட்களை கொண்டு செல்லும் வழியிலேயே இவர் மரணித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இவரின் சடலம் தற்போது பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :